ஒரு நடிகரின் படம் வெளியானால் கட்அவுட் வைப்பார்கள். அந்த கட்அவுட்டுக்கு பால் குடம் குடமாக ஊற்றுவார்கள். ஆனால் ஒரு நடிகர் சொன்னதற்காக பல லட்சம் ரசிகர்கள் கண் தானம் செய்திருக்கிறார்கள். அந்த நடிகர் சமீபத்தில் இறந்துபோனார். அவரது மரணச் செய்தியைக் கேட்டு ஆறுபேர் இறந்துபோனார்கள். அந்த ஆறுபேரின் கண்கள் பன்னிரண்டு பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது. அந்த நடிகரின் கண்தானம் ஏற்கனவே இரண்டுபேருக்கு கண்களில் ஒளியூட்டியுள்ளது. இப்படி ஒரு மரணம் 14 கண்களுக்கு பார்வை ஒளியைப் பகிர்ந்தளித்துள்ள சம்பவம் நடந்த இடம் கர்நாடகம். மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/puneeth_0.jpg)
மல்லாடி என்கிற சிறிய கிராமம். அந்த கிராமத்தில் சுமித்ரா என்கிற சிறுமிக்கு புனித் ராஜ்குமார் என்றால் உயிர். அவரைப் பார்க்கவேண்டும் என கடிதம் எழுதுவாள். திடீரென்று அவருக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்துவிட்டது. உடனே அவள் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு புனித் சென்றார். கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு 12 லட்ச ரூபாய், எதிர்கால சிகிச்சைக்கு 3 லட்சம் என 15 லட்ச ரூபாயை கொடுக்க... அதைப் பார்த்த மருத்துவமனை நிர்வாகம், மருத்துவச் செலவில் 50 சதவிகிதம் இலவசம் என அறிவிக்க... இன்று நலமுடன் இருக்கிறார் சுமித்ரா.
சுமித்ராவைப் போலவே இன்னொரு இளம் ரசிகையான ஷிமோகாவைச் சேர்ந்த கமலவேணிக்கு கேன்சர். உடனே அவளது சிகிச்சைக்கு பன்னிரண்டு லட்ச ரூபாய் அளித்தார் புனித். அந்த பெண்ணின் சிகிச்சையைத் தொடர்ந்து கண்காணித் தும் வந்திருக்கிறார். இவையெல்லாம் அவரது மரணம் வரை யாருக்கும் தெரியாத சங்கதிகள். புனித்தின் மரணம் சுமார் 25 லட்சம் பேரை பெங்களூருவில் உள்ள கண்டீர்வா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை காண வைத்தது.
பத்தாயிரம் பேர் திரண்டாலே லட்சம் பேர் கலந்துகொண்ட தோற்றம் உருவாகும். 25 லட்சம் பேரின் வருகை, பலகோடி மக்கள் திரண்ட தோற்றத்தை ஏற்படுத்தியது. எங்கு பார்த்தாலும் தலைகள்... என கடல் அலைகளாக மக்கள் திரண்டனர்.
அந்த மாபெரும் கூட்டத்தின் ஓரத்தில் அழுதுகொண்டே நின்றிருந்த சிறுமிகளான சுமித்ராவும் கமலவேணி யும் ஒரு டி.வி நிருபரின் கண்களில் பட... இந்தக் கதைகள் வெளியானது. புனித் ராஜ்குமாரின் எளிய மனசாட்சி தெரியவந்தது. அதற்கொரு காரணம் உண்டு. புனித், அவர் உதவி செய்யும் நபர்களுக்கு இடும் கண்டிஷன்தான் அது. இவை எதுவும் விளம் பரத்திற்காக அல்ல... வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என்பதுதான். பிரபல நடிகரான புனித், பிசியான ஷூட்டிங் சமயத்தில் சாதாரண பயிற்சி பெறும் பத்திரிகையாளர் மிஸ்டுகால் கொடுத்தால் கூட ஷூட்டிங் முடிந்தவுடன் அவரே போன் செய்து பேசுவார். அவரது வீட்டுக்கு, திருமணம் என்று செல்லும் பெண் ரசிகைகளுக்கு ஒரு சவரனில் தங்க வளையல், ஒரு புடவை, சீர்வரிசை கட்டாயம் வழங்கப்படும். ஆண் ரசிகர்கள் என்றால் மோதிரம், வேட்டி, சீர்வரிசை கிடைக்கும். பல திருமணங்களுக்கு திருமண வீட்டாருக்குத் தெரியாமல் சென்று அதிர்ச்சி வைத்தியம் தருவார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/puneeth1.jpg)
சிறிய வயதிலேயே நடிக்க வந்த புனித்துக்கு அப்பு என்பதுதான் செல்லப் பெயர். "அப்புவை சீரியஸாக நாங்கள் பார்த்ததில்லை. எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜியுடன் கூடிய சிரிப்புதான் புனித்தின் அடையாளம்' என்கிறார்கள் பெங்களூரூ நகர பத்திரிகையாளர்கள்.
திரைப்படத்தில் நடிப்பதற்குத் தவிர, வேறெதற்கும் காசு வாங்கமாட்டார். அவர் எப்பொழுதும் சாதாரணமாக வாழ்வ தையே விரும்புபவர். சென்னை வடபழனியில் கன்னட ஸ்வர்ணா டி.வி.க்காக "கோடீஸ்வரன்' நிகழ்ச்சி படப்பிடிப்புக்கு வரும் போது, எந்த பந்தாவும் இல்லாமல் வடபழனி கோயிலில் சாமி கும்பிட்டு, சரவண பவனில் சாப்பிட்டுவிட்டு நடந்தே ஏவி.எம். முக்கு போவார். அந்த நிகழ்ச்சியில் அவருக்கு கிடைத்த சம்பளமான 18 லட்ச ரூபாயை அவரது பெற்றோர் பெயரில் நடத்தப்படும் அனாதை ஆசிரமத்திற்கு கொடுத்துவிட்டார்.
சிறுவயது முதல் நல்ல பாடகரான அவர், அவரது படங்களில் பாடும் பாடல்களுக்கு பணம் வாங்கமாட்டார். ஆனால் அவரது உதவியாளர்கள் அவருக்குத் தெரியாமல் பணம் வாங்கினார்கள். அப்படி வாங்கிய பணம் ஒரு கட்டத் தில் ஒரு பாடலுக்கு மூன்று லட்ச ரூபாய் என உயர்ந்தது. ஒரு தயாரிப்பாளர் அதை புனித்தின் கவனத்திற்கு கொண்டு வர.. அந்தப் பணத்தையும், திரைப்பட தொழிலாளர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவுக்குத் தரும்படி தயாரிப்பாளர்களிடம் சொல்லிவிட்டார் புனித்.
அவருடன் எப்பவும் இருக்கும் குமார், சில திரைப்படங்கள் தயாரித்து கடனாளியாகிவிட்டார். அவருக்காக மலையாள நடிகர் மோகன்லாலிடம் பேசி, அவருடன் "மைத்ரி' என்கிற படத்தை இலவசமாக புனித் நடித்துக் கொடுத்து, குமாரண்ணன் என புனித் அழைக்கும் குமாரின் கடனை அடைத் தார் என புனித்தை பற்றி நினைவு களைப் பகிர்ந்துகொள்கிறார் குமார்.
புனித்தின் அப்பா, நடிகர் ராஜ் குமார் யோகாசனத்தில் நம்பிக்கை கொண்டவர். அவர் பிராணயாமம், சிரசாசனம் என தினமும் ஒருமணி நேரம் யோகாசனம் செய்வார். 2001-ஆம் ஆண்டு வரை எந்த உடற் பயிற்சியும் செய்யாமல் கிரானைட் தொழில், ஜாலியான வாழ்க்கை என வாழ்ந்த புனித்திற்கு ஒரு நண்பர் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அது தொடர்பான புத்தகங் களை அறிமுகப்படுத்தினார். 2001 முதல் மரணிக்கும்வரை தினமும் பத்து கிலோமீட்டர் ஓடுவதை வழக்கமாக வைத்திருந்தார் புனித். ஒரு படத்திற்காக கத்திச்சண்டை பயிற்சியை, வாள் சண்டையில் தேசிய சாம்பியனான ஒருவரிடம் பெற்றார். அவர் தினமும் ஐந்து கிலோமீட்டர்தான் ஓடுவார். அவரை தினமும் பத்து கிலோமீட்டர் ஓடவைத்தார் புனித் என்கிறார் அந்த தேசிய வாள் பயிற்சி சாம்பியன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/puneeth2.jpg)
உடற்பயிற்சி செய்வதற்கென்றே உலகப் புகழ்பெற்ற ஜிம் ஒன்றை வீட்டிலேயே நிறுவியிருந் தார் புனித். அதிக உடற்பயிற்சி செய்யாதீர்கள் என யாராவது கூறினால், அவருக்கு கோபம் வரும். ஒருகாலத்தில் ஜாலியான இளைஞராக இருந்த புனித், நடிகராக வரவேண்டும் என, வீரப்பன் கடத்தி வைத்திருந்தபோது கூட அதிகம் கவலைப்பட்டார் அவரது தந்தை ராஜ்குமார். நடிகரானவுடன் உட லில் அதிக கவனம் செலுத்தி உடற்பயிற்சி, மலையேற்றம் என தனது கவனத்தை செலுத்திய புனித், அதற்காக நிறைய விசேஷ மருந்துகளை எடுத்துக்கொண்டார். அந்த மருந்துகள் அவரது மரணத்திற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் என சந்தேகப்படுகிறார்கள் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள்.
மரணத்திற்கு முந்தைய இரவு இசை யமைப்பாளர் ஒருவரின் பிறந்தநாளில் கலந்து கொண்டு நள்ளிரவு ஒன்றரை மணிக்கு திரும்பிய புனித், மறுநாள் உடற்பயிற்சியின்போது மார்பை பிடித்துக்கொண்டு விழுந்திருக்கிறார். உடனே அவரது வீட்டிலிருந்து நூறு மீட்டர் தூரத்தில் வசிக்கும் டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு, பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் படி கூறியுள்ளார். ஆனால் போகும் வழியிலேயே அவருடைய மனைவியின் மடியிலேய இரண்டாவது முறையாக மாரடைப்பு வந்து மரணமடைந்துவிட்டார் புனித் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
47 வயதான புனித்தும் அவரது சகோதரர் களும் சென்னையில் பிறந்து வளர்ந்து படித்த வர்கள். அவர்கள் வளர்ந்ததெல்லாம் தி.நகரில் உள்ள சிவாஜிகணேசனின் வீட்டில்தான். அவர் களுக்கு கன்னடம் முழுமையாக படிக்கத் தெரியாது. கன்னடத்தில் பேசுவார்கள்... அவ்வளவுதான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/puneeth3.jpg)
சினிமாவில் நடிப்பதற்கு முன்பு ராஜ் குமாரின் மகனான புனித்திற்கு, திருமணம் நடத்தி வைத்தது சிவாஜிகணேசனும் அவரது மனைவியும்தான். சத்தியமங்கலம் தொட்டகாஜ னூர் என்கிற தமிழக கிராமத்தை சொந்த ஊராகக் கொண்ட ராஜ்குமார் குடும்பத்தின் தமிழக தொடர்புகளைச் சொல்கிறார்கள் பெங்க ளூரூவில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்கள். 41 பள்ளிகள், 9 அனாதை ஆசிரமங்கள், 1800 மாண வர்களின் கல்விச் செலவு என தான் சம்பாதித் ததையெல்லாம் அள்ளிக் கொடுத்த புனித்தின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தக் கூடிய மக்கள் திரள், ராஜ்குமார் குடும்பத்தில் உள்ள நடிகர்களின் ஆளுமையை பறைசாற்றியது.
ஒருவேளை வீரப்பனால் கடத்தப்பட்ட ராஜ்குமாரின் உயிருக்கு ஏதாவது ஆகியிருந் தால்... இந்த லட்சக்கணக்கான ரசிகர் பட்டாளம் தமிழர்களுக்கு எதிராக திரும்பியிருக்கும். "இரு மாநில அரசு தூதரான நக்கீரன் ஆசிரியரின் முயற்சியால் ராஜ்குமார் பத்திரமாக வந்து சேர்ந்தார். இல்லையென்றால் எங்கள் கதி என்னவாகியிருக்கும்' என அச்சத்துடன் நினைவுகூர்கிறார்கள் கர்நாடக தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-11/puneeth-t.jpg)